The Golden Egg
தங்க முட்டை இட்ட வாத்து
ஓர் ஊரில் சிங்கன் எனும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டில் ஓர் வாத்தை வளர்த்து வந்தான். அவ் வாத்தும் அவனிற்கு அன்றாடம் ஒரு முட்டை இட்ட வண்ணம் இருந்தது. ஒரு நாள் அதிசயமாக அவ் வாத்து தங்க முட்டை ஒன்றை இட்டது. மிகுந்த மகிழ்ச்சி அடைந்த சிங்கன் அம் முட்டையை விற்று அதிகளவு பணத்தை பெற்றான். இவ்வாறு சிலநாட்கள் சென்றன. அப்போது சிங்கனுக்கு ஓர் யோசனை தோன்றியது. அது என்னவென்றால், ஒவ்வொரு நாளும் ஒரு ஒரு முட்டையாக எடுக்காது ஒரே நாளில் பெரிய பணக்காரன் ஆவதே அந்த யோசனை. உடனே சென்று வாத்தை பிடித்து அதன் வயிற்றுப்பகுதியை வெட்டினான். வாத்து இறந்து விட்டது. வயிற்றினுள் ஒரேயொரு முட்டையே காணப்பட்டது. மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்தான் சிங்கன்
படிப்பினை- பேராசை பெரு நஷ்டம்.