lion and Wisp
சிங்கமும் குளவியும்

ஓர் அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒருநாள் சிங்கம் மிகுந்த களைப்புடன் உறங்கிக் கொண்டு இருந்தது. அப்போது அவ்வழியே சென்ற குளவி சிங்கம் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சிங்கத்தின் காதருகில் சென்று இரைந்த வண்ணம் இருந்தது. தூக்கம் கலைந்த சிங்கம் கோபத்துடன் "எனது தூக்கத்தை கெடுக்காது சென்று விடு" என எச்சரித்தது. குளவியோ, "உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" எனக் கூறி சிங்கத்தை தூங்க விடாது கஷ்டப்படுத்தியது மட்டுமல்லாது சிங்கத்தை மிக மோசமாக கொட்டி விட்டு "உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது" எனக் கூறியது. சிங்கமோ வலி தாங்க முடியாமல் கதறியது. இவ்வாறு சிங்கத்தை கஷ்டப்படுத்திய குளவி தான் செல்லும் வழியில் சிலந்தி ஒன்றின் வலையில் சிக்கி சிலந்திக்கு இரையாகியது.