Grin and snake
கீரியும் பாம்பும்

ஓர் ஊரில் வயலோரமாக சிறு வீடொன்றில் தாய், தந்தை, மற்றும் அவர்களின் குழந்தை என மூவர் வசித்து வந்தனர். அவர்கள் வயலோரத்தில் வாழந்ததால் பாம்புகளின் தொல்லை அதிகளவில் காணப்பட்டது. ஆகவே ஓர் கீரியை வளர்த்து வந்தார்கள். ஒரு நாள் தந்தை வேலைக்காக வெளியே சென்றிருந்தார். குழந்தை தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்தது. அப்போது தாயார் நீர் எடுப்பதற்கு கீரியை குழந்தைக்கு பாதுகாப்பிற்காக வீட்டில் விட்டு விட்டு குடத்துடன் நீர் நிலைக்கு சென்று விட்டார். வீட்டிற்கு வரும் போது கீரி, வாய் முழுவதும் இரத்தத்துடன் தொட்டில் அருகில் நின்று கொண்டிருந்தது. குழந்தையின் சத்தமும் கேட்கவில்லை. தன் குழந்தையைத் தான் கீரி கொன்று விட்டது என எண்ணி கையில் வைத்திருந்த குடத்தை கீரியின் மேல் போட்டார். கீரி இறந்து விட்டது. பின் தொட்டிலை பார்த்தார். அதில் தனது குழந்தை விளையாடிய வண்ணம் இருப்பதையும் தொட்டிலின் கீழ் நாகபாம்பொன்று இறந்து கிடப்பதையும் கண்டார். தன் குழந்தையை தாக்க வந்த பாம்பை கொன்ற கீரியை தான் கொன்றதை நினைத்து மிகவும் வேதனை அடைந்தார்.