Bear and Friends
கரடியும் நண்பர்களும்
பாலன், சீலன் எனும் இரு நண்பர்கள் காட்டிற்கு வேட்டைக்காக சென்றார்கள். அப்போது கரடி ஒன்று இவர்களை தாக்க வந்தது. பாலனிற்கு நன்றாக மரம் ஏறத் தெரியும். சீலனை விட்டு விட்டு பாலன் வேகமாக சென்று மரத்தில் ஏறினான். சீலனிற்கு மரம் ஏறத் தெரியாது. என்ன செய்வது என்று அறியாது அவன் இறந்தவன் போல் நிலத்தில் படுத்துக் கொண்டான். கரடி அவனருகில் வந்து மோர்ந்து பார்த்து அவன் இறந்துவிட்டான் என எண்ணி சென்று விட்டது. கரடி சென்ற பின் பாலன் மரத்திலிருந்து இறங்கி "கரடி உன்னிடம் என்ன கூறியது?" என சீலனிடம் கேட்டான். சீலன் அவனிடம் "ஆபத்தில் உதவாத நண்பர்களோடு சேராதே" என கூறியது என கூறினான். அதை கேட்ட பாலன் தலை குனிந்தான்.
படிப்பினை -நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்.